Latestமலேசியா

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக NCSM ஏற்பாட்டில் கோல்ப் போட்டி

மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்திற்கு நிதி திரட்டும் நடவடிக்கைக்கு ஆதரவாக JSM – TAQA அழைப்பு கோல்ப் போட்டி மார்ச் 8ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோத்தா கமுனிங் Kota Permai Golf and Country Club ப்பில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் கலந்துகொள்வோருக்கு ஆயிரம் ரிங்கிட் நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும்.
பொதுவாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் நிதி திரட்டும் நடவடிக்கையாக கோல்ப் போட்டி நடத்தப்படுவதாக மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் M. Muralitharan தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டம், முன்கூட்டியே அதனை கண்டறிவதோடு அந்நோயை தடுப்பது மற்றும் பரவலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய முக்கிய நடவடிக்கைகளுக்காக மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம் இதனை முன்னெடுத்துள்ளது.
அந்த அடிப்படையில் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த போட்டியில் திரட்டப்படும் நிதி புற்றுநோய்க்கு எதிரான போராட்டங்களுக்கும் அதற்கான ஆதரவு நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படும் .
இவ்வாண்டு கோல்ப் போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி வருமானம் குறைந்த B40 தரப்பினரின் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய்க்கான HPV தடுப்பூசிக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
அரசாங்கம் மற்றும் தனியார் பள்ளிகளில் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய்க்கு எதிரான HPV தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வந்தபோதிலும் கோவிட் தொற்றினால் அந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவிகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி போடும் வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில்,இதன் பாதிப்பு தற்போது அதிகரித்திருப்பதாக மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் தலைவரும் மருத்துவ இயக்குநருமான Datuk Dr Saunthari Somasundaram கூறியுள்ளார்.
மலேசியாவிலுள்ள அதிகமான சிறுபான்மையினர்கூட HPV தடுப்பூசியை போடக்கூடிய வசதியில் இல்லை. HPV தடுப்பூசிதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முறியடிக்கும் மற்றும் தடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை அதிகமானோர் அறிந்துகொள்ளாமல் இருப்பதையும் டாக்டர் செளந்தரி சுட்டிக்காட்டினார்.
எனவே சிறுபான்மை மக்களுக்கும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் அதன் விழிப்புணர்வையும் நாங்கள் ஏற்படுத்தி வருகிறேம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளாமல் இருப்பதால் அந்நோய்க்கான சிகிச்சை உடனடியாக பெறுவதில் தாமதப்படுத்தினால் அந்த நோய் அபாய கட்டத்தை அடைந்துவிடும் என மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் நீடித்த மற்றும் மேம்பாட்டு தூதரும் RHB Insurance தலைவருமான Jahanath Muthusamy தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தொடக்கத்திலேயே அறிந்துகொண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் அதன் பாதிப்பை முன்கூட்டியே குறைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!