Latestமலேசியா

அண்டை வீட்டு மூதாட்டியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!

காஜாங், அக் 20 – தனது அண்டை வீட்டு மூதாட்டியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, உணவகப் பணியாளர் ஒருவர் மீது காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

ஆயினும் தம்மீதான அக்குற்றச்சாட்டை அந்த 29 வயது ஆடவர் மறுத்துள்ளார்.

அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகலில் நிகழ்ந்த சம்பவத்தில் செமினி (Semenyih) விலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமது அண்டை வீட்டுக்காரரான 58 வயது மூதாட்டியை அவ்வாடவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப் பட்டது.

அவ்வாடவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

குற்றஞ்சாட்டப்பட்டவரை எண்ணாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையுடன் விடுவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மூதாட்டியைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிட்டார்.

அதோடு வழக்கு முடிவடையும் வரை, மாதம் ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையம் வந்து கையொப்பமிட வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு டிசம்பர் 15ஆம் தேதி மறு செவிமடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!