
இந்தியா, டிச 4- இயக்குனர் சிவா கைவண்ணத்தில் உருவாகிய ‘தர்பார்’ திரைப்படத்தை அடுத்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இது ரஜினியின் 168-ஆவது படமாகும். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றியுடன் டி,இமான் இசையமைத்து பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.
மேலும், அண்ணாத்த படப்பிடிப்பில் வெறும் 40 விழுக்காடு பணி மட்டுமே மீதமுள்ளது. இதனை முறையாக முடித்துக் கொடுப்பது என்னுடைய கடமை என்றும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் தான் ரஜினியின் இறுதி படமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.