Latestஇந்தியா

அதிகமானோர் கோவிட் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்

புதுடில்லி, ஜூலை 11 – கோவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த உயிர்க்கொல்லி தொற்றுக்கு இதுவரை 822,603 பேர் உள்ளாகியுள்ளனர்.
அதோடு இதுவரை கோவிட் தொற்றினால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 22,144 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த நோயினால் 516,206 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இன்னும் 8.,944 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 136,671பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இன்னமும் 15,000த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்னர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் அமெரிக்காவில் கோவிட் தொற்று மேலும் பெரிய அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்காவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு 32 லட்சத்து 91,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் தினசரி இந்த தொற்றின் பாதிப்பக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் கோவிட் தொற்றினால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடாக பிரேசில் விளங்குகிறது.. அந்த தென் அமெரிக்க நாட்டில் இதுவரை 70,524 பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் 18 லட்சத்து 4,338 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 8,000த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!