Latestமலேசியா

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை

ஜோர்ஜ் டவுன், ஆக 12- தமது தனிப்பட்ட புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டியதை தொடர்ந்து இளம் பெண் ஒருவர் பினாங்கு பாயன் லெப்பாஸ் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியின் 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண்ணுடனான நட்புறவை துண்டித்துக்கொள்ளும்படி அவரது தாயர் சம்பந்தப்பட்ட இளைஞனை தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அவரது மகளின் தனிப்பட்ட புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டிவிட்டு உடனடியாக தொலைபேசி உரையாடலை துண்டித்துள்ளான்.
காதலனின் அந்த மிரட்டலால் பயந்துப்போன சம்பந்தப்பட்ட இளம் பெண் அவர்கள் தங்கியுள்ள் அடுக்கு மாடி குடியிருப்பின் 22ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் 20 வயது சந்தேகப் பேர்வழி கோலாலகங்சார் பாடாங் ரெங்காசில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷஹாபுடின் அப்துல் மானான் தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழியின் கைதொலைபேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கைத்தொலைப்பேசியில் மேலும் சில பெண்களின் புகைப் படங்களும் இருந்தன. அந்த ஆடவன் முகநூலில் அறிமுகமாகும் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு மறுத்து அவனுடனான நட்புறவை துண்டித்துக்கொள்ள முன்வந்தால் அப்பெண்களின் திருத்தம் அதாவது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி வந்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஷஹாபுடின் கூறினார்.
வேலையில்லாத அந்த சந்தேகப் பேர்வழி கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர் மற்றும் பேரா ஆகிய இடங்களிலும் பெண்களை மிரட்டி பணம் கேட்டுள்ளதும் தெரியவந்துள்ளது . இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!