Latestஉலகம்

இலவச பிரீமியம் சந்தா அறிவிப்பால் உற்சாகமான X (டிவிட்டர் ) பயனர்கள்

வாஷிங்டன், ஏப்ரல் 5 – X ( twitter ) தளத்தின் கொள்கையில் அடுத்த u-turn-னாக, கட்டண முறையில் வழங்கப்பட்டு வந்த பிரீமியம் சந்தா, தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது.

அதாவது, X தளத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட (verified) சந்தாத்தாரர்களைப் பின்தொடர்பாளர்களாகக் (followers) கொண்ட அனைத்து கணக்குகளுக்கும், நேற்று முதல் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதே சமயம், 5,000-க்கும் மேற்பட்ட verified சந்தாத்தாரர்களை followers-களாகக் கொண்ட கணக்குகளுக்கு, பிரீமியம் பிளஸ் சந்தா (Premium+) இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சலுகைகளில் குறைந்த விளம்பரங்களே இருக்கும்; அதோடு இயங்குத்தளத்தின் feed-களில் அதிக இட வசதியும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், X தளத்தின் நீல நிற டிக் பெறுவது, செல்வாக்குமிக்க பிரபலங்கள், முக்கிய நிறுவனங்கள், ஊடக ஜாம்பவான்கள் போன்ற பெரிய கணக்குகளைக் கொண்டவர்களுக்குத் தான் சாத்தியமான ஒன்றாக இருந்தது.

எனினும், அது சாதாரணப் பயனர்களுக்கு நியாயமான ஒன்றல்ல எனக் கூறி, Elon Musk இனி கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அவ்வசதி கிடைக்கும் என மாற்றினார்.

அவரின் அவ்வறிப்புக்கு பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன; யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி வாங்கலாம் என்றால், X தளத்தில் நீல நிற டிக்குகள் மிதமிஞ்சிய அளவில் இருக்கும் என விமர்சனம் பயனர்கள் செய்தனர்.

இந்த நிலையில், இந்த u-turn நேற்று முதல் அமுலுக்கு வந்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!