Latestமலேசியா

அந்நிய தொழிலாளர்களை நிர்வகிக்க நிறுவனம் நியமிப்பா? உள்துறை அமைச்சு மறுப்பு

புத்ராஜெயா, செப் 17 – அந்நிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்க, தாங்கள் எந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி, ஒப்புதல் கடிதங்களை வெளியிட்டது கிடையாது என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அந்நிய தொழிலாளர்களை நிர்வகிக்க நிறுவனங்களை நியமித்து ஒப்புதல் கடிதங்களைத் தமது தரப்பு வெளியிட்டிருப்பதாக போலியான தகவல்கள் பரவியிருக்கின்றன. அப்படி, எந்தவொரு ஆவணங்களையும் தமது தரப்பு வெளியிட்டது கிடையாது.

உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வான் அகமட் டாலான் அப்துல் அஸீஸ் (Datuk Wan Ahmad Dahlan Abdul Aziz)சின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஒப்புதல் கடிதங்கள் போலியானவை என்றும் இதன் தொடர்பில் தமது தரப்பு போலீஸ் புகார் செய்திருப்பதாகவும், அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

தாங்கள் அந்நிய தொழிலாளர்களை நிர்வகிக்க எந்த நிறுவனங்களையும் நியமித்தது இல்லை. எனவே இதன் தொடர்பில் பரப்பப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யானது என அமைச்சு விளக்கியது.

தாங்கள் அந்நிய தொழிலாளர்களின் பதிவுகளைக் கவனிக்க உள்துறை அமைச்சால் நியமிக்கப் பட்டிருக்கும் நிறுவனம் எனக் கூறி வரும் தரப்புகளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அமைச்சு பொது மக்களுக்கு ஆலோசனை கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!