Latestமலேசியா

அன்பரசன் ஆற்றில் மூழ்கினார்; வேலையின் போது நிகழ்ந்த துயரம்

கோத்தா திங்கி,நவ 21 – குளுவாங், பெக்கான் லாயாங்-லாயாங் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து பலியானார். நேற்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 39 வயது எம்.அன்பரசன் என்பவர் அச்செம்பனை தோட்டத்தில் தனியாக தரையில் விழந்த பழங்களை சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் தவறுதலாக வழுக்கி ஆற்றில் விழுந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

தகவல் அறிந்து 21 பேர் கொண்ட தீயணைப்பு படையினர் சம்பவதளத்திற்கு விரைந்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிற்பகல் 12.15 மணியளவில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது. அத்தோட்டம் அருகே உள்ள ஆற்றிலிருந்து பெங்கெலி ஆற்று பகுதி வரை அவரது உடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ரெங்காம் தீயணைப்பு படையின் உதவி கண்காணிப்பாளர் அஸ்ராவ் நூர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

அன்பரசனின் உடல் ஆறு அடி ஆழத்தில் ஒரு மர கட்டையில் சிக்கிக் கொண்டிருந்ததாக அஸ்ராவ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!