Latestமலேசியா

அன்வாருக்கு எதிராக அரசியல் நெருக்குதல், ஓரினப் புணர்ச்சி உட்பட 6 விசாரணை – போலீஸ் விளக்கம்

கோலாலம்பூர், அக் 17 – ஓரினப் புணர்ச்சி உட்பட 6 விவகாரங்கள் தொடர்பில் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் உறுதிப்படுத்தினர். அவருக்கு எதிரான விசாரணையில் அரசியல் நெருக்குதல் கிடையாது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் ஹூசிர் முகமட் தெரிவித்தார்.

அரசியல் நெருக்குதலின் காரணமாகத்தான அன்வார் மீதான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஹூசிர் மறுத்தார். புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றிருப்பதாக போட்டிக்சன் எம்.பியான அன்வார் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போலீசார் நேற்று விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது அன்வார் தமது வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் மற்றும் அவரது அரசியல் செயலாளர் பார்ஹாஸ் வாஃபா சல்வடோர் ரிசால் முபராக் ( Farhash Wafa Szalvador Rizal Mubarak ) ஆகியோரும் உடன் வந்தனர். எந்தவொரு தரப்பினரின் உத்தரவு மற்றும் அரசியல் நெருக்குதலின்றி நிபுணத்துவ முறையில் விசாரணை நடத்தப்பட்டதாக ஹூசிர் முகமட் தெரிவித்தார். வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைக்கு போலீசிற்கு வாய்ப்பு வழங்கும்படி அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதோடு பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டலாக இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹூசிர் எச்சரித்தார். அன்வாருக்கு எதிராக 113 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்களை செய்தவர்களில் சில எம்.பிக்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. குற்றவியல் சட்டத்தின் 505 (b) விதி மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதியின் கீழ் அன்வார் மீது விசாரனை நடத்ப்படுகிறது. 121 எம்.பிக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் கூறிக்கொண்டது ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருப்பதால் பல்வேறு ஆரோக்கியமற்ற ஆருடங்களுக்கு வழிவகுத்தது.

பொதுமக்களிடையே அச்சுறுத்தல் மற்றும் பொது ஒழுங்கு குற்றங்களுக்கு வழிவகுக்கும் நோக்கத்தில் இந்த ஆருடங்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பட்டது. எம்,பிக்களின் ஆதரவு பெற்றதாக கூறிக்கொண்டரைத் தவிர்த்து இதர ஐந்து தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தும் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!