Latestஇந்தியாஉலகம்சினிமா

அமிதாப் பச்சன் –அபிஷேக் பச்சன் கோவிட் -19 பாதிப்ப

மும்பை, ஜூலை 12- இந்தி திரைப்பட உலகின் பிரபல நட்சத்திரம் அமிதாப் பச்சன் மற்றும் அவரது புதல்வரும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதைத் தொடந்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தமது டிவிட்டரில் உள்ள 4கோடியே 30 லட்சம் ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். தம்முடன் நெருக்கமாக உள்ள அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கோவிட் சொற்ப அறிகுறிக்கு உள்ளானதைத் தொடர்ந்து தாமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அபிஷேக் பச்சனும் தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அமைதி மற்றும் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே மும்பை உட்பட மராட்டிய மாநிலத்தில் பல இடங்களில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில், 8,139 பேருக்கு கோவிட் தொற்றியது. அந்த மாநிலத்தில் மட்டும் இதுவரை 246,600பேர் கேவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் 10,116பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!