Latestமலேசியா

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் முன்னணி

வாஷிங்டன் அக் 18 – அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் இவ்வேளையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பைடன் தற்போது முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கிறது தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இம்முறை அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்..
கோவிட் தொற்நறு பரவலால் அமெரிக்காவில் அதிகமானோர் மரணம் அடைந்ததால் அதிபர் டிரம்ப் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. இப்போதைய கருத்துக் கணிப்பில் ஜோ பைடான் 9 விழுக்காடு முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் அவரது வெற்றியை இது உறுதிப்படுத்தும் என்று கூறமுடியாது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகனங்களின் எலெக்ட்ரோல் வாக்குகளைப் பெற முடியாத காரணத்தினால் அதிபரகும் முயற்சியில் தோல்வி கண்டார்.
டோனல்ட் டிரம்ப் தற்போது இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் திரளாக கலந்துகொண்டாலும் அவை அனைத்தும் அவருக்கு சாதகமான வாக்குகளாக மாறும் என்பதற்கு உத்தரவாதமில்லை. எப்படியிருந்தபோதிலும் தமது பதவியை தற்காத்துக் கொள்வதில் டிரம்ப் கடும் மிரட்டலை எதிர்நோக்குவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!