Latestஉலகம்

அமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்

வாஷிங்டன், ஆக 12- எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த நடப்பு அதிபர் டோனல் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அவர் தம்முடன் இணைந்து துணையதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக செனட்டர் கமலா ஹரிஸ் ( Kamala Harris) என்ற இந்திய வம்சாவளி பெண்ணை தேர்வு செய்துள்ளார்.
கலிபோர்னியா செனட் சபை உறுப்பினரான 55 வயது கமலா ஹரிஸை துணையதிபர் பதவிக்கு நிறுத்தப்போவதாக ஜோ பைடன் கூறியிருப்பத்தால் அமெரிக்க கறுப்பர்கள் மத்தியில் அவருக்கு மேலும் அதிகமாக ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் துணையதிபர் பதவிக்கு வேட்பாளராக முன்மொழியப்படும் முதல் கறுப்பர் இன பெண என்ற பெருமையை கமலா ஹரிஸ் பெறுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்து வருவதால் அங்கு கறுப்பர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ள நிலையில் துணையதிபர் பதவிக்கு கமலா ஹரிஸை களமிறக்கும் ஜோ பைடன் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஜோ பைடனும் கமலா ஹரிசும் விருந்து நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொண்டனர்.
கோவிட் தொற்றின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் அமெரிக்காவில் கறுப்பர் இன மக்கள் நடத்திய போராட்டம் போன்றவை அதிபர் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!