Latestமலேசியா

அம்னோ வேட்பாளர் பட்டியலில் மூசா அமான் பெயர் இல்லையா? சபா அம்னோ விளக்கம்

கோத்தா கினபாலு, ஆக 2- சபா தேர்தலுக்கான அம்னோ வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் பெயர் இடம்பெறவில்லையென்று வெளியான தகவலில் உண்மையில்லையென அம்மாநில அம்னோ தொடர்பு குழுவின் தலைவர் புங் மொக்தார் ராடின் தெரிவித்தார். உள்ளூர் இணையத் தளத்தில் வெளியான அந்த தகவல் உண்மையில்லையென அவர் சொன்னார்.
மூசாவுக்கு எதிராக அந்த இணையத் தளம் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளது, இது திட்டமிட்டே மூசாவுக்கு எதிரான பரப்பட்ட செய்தியாகும். என சபா அம்னோ தொடர்பு குழுவின் தலைவருமான புங் மொக்தார் கூறினார். அம்னோ தொடர்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் தாம் இந்த செய்தியை வெளியிடவில்லை என அவர் தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிபுகா சட்டமன்ற தொகுதியில் மூசா அமான் வெற்றி பெற்றார் . நடப்பு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த தொகுதியை தெற்காத்துக் கொள்வார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையென புங் மொக்தார் தெளிவுபடுத்தினார்.
சபா அம்னோவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரே தீர்வு எதிர்வரும் சபா சட்டமன்ற தேர்தலுக்கான அம்னோ வேட்பாளரின் பட்டியலிருநது மூசா அமானின் பெயர் நீக்கப்பட் வேண்டும் என தாம் கூறியதாக இணையத் தள பதிவேட்டில் வெளியான செய்தியும் பொய் என புங் மொக்தார் சுட்டிக்காட்டினார்.
சபாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கும் அம்னோவுக்கும் தொடர்பு இல்லையென்றும் மூசா அமான் தனிப்பட்ட முறையில் சொந்தமாக சில முடிவுகளை எடுத்ததே அந்த நெருக்கடிக்கு காரணம் என தாம் கூறியதாக வெளியாத செய்தியையும் புங் மொக்தார் மறுத்தார். அவர் மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!