Latestமலேசியா

அவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜன 25 – அவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து வெளிப்படையாக பேசினால் தாங்கள் தண்டிக்கப்படலாம் என அஞ்சுகின்றனர் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். தாம் அதிகமானோருடன் பேசியதாகவும் அவர்களில் பலர் பல்வேறு காரணங்களுக்காக அவசரநிலை தேவையில்லை என்று கூறுவதாக டாக்டர் மகாதீர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவசரநிலையின்போது சிறப்பு அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளதால் அதற்கு எதிராக குரல் எழுப்புவதற்கு முன்வர மறுக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது என்று விளக்கம் அளித்தாலும் தம்மிடம் பேசுபவர்களில் பெரும்பாலோர் வேறுவிதமான கருதுகின்றனர் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

அரசாங்கம் எதை செய்ய முடியாது என்று தாம் விளக்கம் அளித்தாலும் அவர்கள் அஞ்சுவதை வெளிப்படையாக உணர முடிகிறது. இந்த விவகாரம் குறித்து பேசும்போது குரல் வெளிவராத அளவுக்கு தலை குனிந்தவாறே பேசுகின்றனர். மேலும் தங்களது கருத்து குறித்து வேறு எவரிடமும் வெளியிட வேண்டாமென தம்மிடம் கூறுகின்றனர் என்றும் மகாதீர் விவரித்தார். அவசரநிலையை ரத்துச் செய்யும்படி முறையிடும் கடிதத்தில் கையெழுத்திடும்படி கேட்டுக்கொண்டாலும் அதற்கு அவர்கள் மறுப்பதையும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!