
ஷா அலாம், ஜன 14- அவசர கால உத்தரவை ரத்து செய்யக் கோரி பேரரசரிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடிதம் அனுப்பி இருக்கின்றார்.
நாட்டைப் பாதித்திருக்கும் கோவிட் -19 தொற்று, பொருளாதார நெருக்கடி ஆகியவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் உடனடியாக கூட வேண்டும் என அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கெஅடிலான், டிஏபி, அமானா ஆகிய கட்சிகள் அடங்கிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் அவசரநிலை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அரசாங்கத்தில் தமது நிலையை தற்காத்துக் கொள்வதற்காக அந்த அவசரக் காலம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டணி சாடியது.