Latestமலேசியா

ஆசியாவுடனான நட்புறவை ஜோ பைடன் மேம்படுத்துவார்-டாக்டர் மகாதீர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜன 14- அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஆசிய நாடுகளுடன் சிறந்த நட்புறவை ஏற்படுத்திக் கொள்வார் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார். சீனாவுடனான தேவையற்ற வர்த்தக மோதலை தவிர்த்துக்கொண்டு அமெரிக்காவை ஆதரிக்கும் பாரம்பரிய நாடுகளுடனான நட்புறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்றும் அவர் கூறினார்.

டோனால்ட் டிரம்ப்பைவிட மாறுபட்ட நிலையில் ஜோ பைடனின் செயல்பாடு இருக்கும் என மகாதீர் தெரிவித்தார். தென் கிழக்காசியா குறித்து டோனல்ட் டிரம்பிற்கு எதுவும் தெரியாது என ராய்ட்டருக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

டோனல்ட் டிரம்ப் பொதுவாகவே அனைத்து நாடுகளுடனும் எதிர்ப்பு போக்கை கொண்டிருந்தார். அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். ஆனால் ஜோ பைடன் இப்போதைய நிர்வாகத்தின் கொள்கையை மாற்றி அமெரிக்காவுக்கு இதற்கு முன் நட்புறவாக இருந்த பல நாடுகளுடன் மீண்டும் சிறந்த நட்புறவை ஏற்படுத்திக்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டுவார்.

சீனாவுடன் வர்த்தக மோதலில் ஜோ பைடன் ஈடுபடுவார் என நான் நம்பவில்லை . இப்போது இருந்துவரும் வர்த்தக ஏற்றத்தாழ்வை சீராக்கும் நடவடிக்கையில் பைடன் கவனம் செலுத்துவார் என்றும் டாக்டர் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!