Latestஉலகம்

7 விருதுகளைக் குவித்து ஆஸ்கார் மேடையை ஆக்கிரமித்த Oppenheimer

ஹாலிவூட், மார்ச் 11 – ‘அணுகுண்டின் தந்தை’ என்றழைக்கப்படும் Julius Robert Oppenheimer-ரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Oppenheimer படம், எதிர்பார்த்தபடியே ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் இன்று நடைபெற்ற 96-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில், முதன்மை விருதான சிறந்த படம் உட்பட மொத்தமாக 7 விருதுகளை Oppenheimer வென்றது.

அப்படத்தின் இயக்குநர் Christopher Nolan சிறந்த இயக்குநருக்கான விருதையும், Cilian Murphy சிறந்த நடிகருக்கான விருதையும், Robert Downey Jr சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றனர்.

சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகியவை Oppenheimer வென்ற ஏனைய விருதுகளாகும்.

கடந்தாண்டு வெளியாகி உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற Oppenheimer படம், முன்னதாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதளிப்பில் 5 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை, Poor Things படத்திற்காக Emma Stone தட்டிச் சென்றார்; அப்பிரிவில் அவருக்கு இது இரண்டாவது ஆஸ்கர் விருதாகும்.

கடந்தாண்டு இளையோர் மத்தியில் பிரபலமான Barbie படத்தில் இடம் பெற்ற What Was I Made For என்ற பாடலுக்காக, சிறந்தப் பாடலுக்கான விருதை ‘2K Kids’-சான Billie Eilish வாகை சூடினார்.

இதன் வழி மிக இள வயதில் 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளியவர் என்ற பெருமையை, 22 வயது Billie பெறுகிறார்.
அவர் ஏற்கனவே James Bond படத்தில் இடம் பெற்ற No Time To Die பாடலுக்காக அவ்விருதை வென்றவர் ஆவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!