Latestமலேசியா

ஆடம்பர வீட்டில் விபச்சார துடைத்தொழிப்பு நடவடிக்கை 25 லட்சம் ரிங்கிட் பறிமுதல்

கோலாலம்பூர், அக் 18- ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றில் விபச்சார துடைத்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போலீசார் அவ்வீட்டிலிருந்து 25 லட்சம் ரிங்கிட் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது அவ்வீட்டின் அறையில் இருந்த துணிப் பெட்டியில் அந்த ரொக்கப் பணம் இருந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் ஹூசிர் முகமட் கூறினார்.
சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைக்காக இந்த பணம் வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் சொன்னார். எனினும் இது தொடரபாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த ஆடம்பர வீட்டில் செய்தியாளரகளிடம் பேசியபோது ஹூசிர் முகமட் தெரிவிரித்தார்.
அவ்வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட புக்கிட் அமான் டி7 விபச்சார, சூதாட்ட மற்றும் குண்டர் கும்பல் துடைத்தொழிப்பு நடவடிக்கை பிரிவினர் 8 நபர்களை கைது செய்தனர். சீனாவைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள் ,உள்நாட்டைச் சேர்ந்த 22 முதல் 48 வயதுக்குட்பட்ட ஒரு பெண், மற்றும் மற்றொரு ஆடவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார், அதோடு மூன்று கையடக்க கணினிகள் மற்றும் 4 கைத்தொலைபேசிகள் மற்றும் சில போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!