
கோலாலம்பூர், ஜன 13 – ஷெல் மலேசியா (Shell Malaysia ) நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. ஈராண்டு கால கட்டத்தில், அதன் இரு விழுக்காடு பணியாளர்கள் அதாவது 250 –திலிருந்து 300 பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.
குறிப்பாக, கச்சா எண்ணெய் – இயற்கை எரிவாயுக்கான வளத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களே அந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படுவர் என அந்நிறுவனத் தலைவர் டத்தோ இயான் லோ ( Datuk Iain Lo ) தெரிவித்தார். ஷெல் மலேசியா நிறுவனத்தின் இந்த முடிவு , பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு கசப்பான ஒரு செய்தியாகும்.
எனினும் அந்த நிறுவனம் தொடர்ந்து போட்டியாற்றலுடன் விளங்கவும், நடப்பிலிருக்கும் சவாலான சூழலை எதிர்கொள்ளவும் அந்த முடிவை எடுப்பது அவசியம் என தலைவர் டத்தோ இயான் லோ குறிப்பிட்டார்.