Latest
ஆற்று நீர் விவகாரம் நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; கெடா மந்திரிபுசாருக்கு பினாங்கு முதல்வர் பதிலடி

ஜோர்ஜ் டவுன், ஜன 14- சுத்தகரிக்கப்படாத ஆற்று நீர் விவகாரம் தொடர்பில் கெடா மந்திரிபுசார் முகமட் சனூசி முகமட் நோரை நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு தயார் என பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யாவ் கூறியுள்ளார்.
தனது எல்லைப் பகுதியிலுள்ள Sungai Muda ஆற்றிலிருந்துதான் பினாங்கு அரசாங்கம் நீரை எடுக்கிறது. அந்த நீருக்காக பினாங்கு அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை கெடா மாநிலத்திற்கு இல்லையென சோவ் கோன் யாவ் தெரிவித்தார்.
கெடா அரசு வழக்கு தொடுக்க முன்வந்தால் அதனை எதிர்நோக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் முழுவீச்சில் தயாராய் இருக்கிறது என சோவ் கோன் யாவ் (Chow Kon Yeow ) பதிலடி தெரிவித்துள்ளார்.