Latestமலேசியா

ஆலயங்கள் உட்பட வழிபாட்டு தலங்களுக்கு 68 லட்சம் ரிங்கிட் மான்யம் – பினாங்கு அரசு

பினாங்கு, செப் 16 – 2016 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டு தலங்களுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் இதுவரை 68 லட்சம் ரிங்கிட் மான்யத்தை வழங்கியுள்ளது. பினாங்கு மாநிலத்திலுள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் சீக்கியர்களின் ஆலயங்களான குர்துவாரா ஆகியவற்றுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 165 விண்ணப்பங்களைத் தொடர்ந்து இந்த நிதி வழங்கப்பட்டது. பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் இதனை தெரிவித்தார்.

இன்று காலை மூன்று வழிபாட்டு தலைங்களுக்கு மொத்தம் 150,000 ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் சொன்னார். பினாங்கு பௌத்த அறநிறுவனம், ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம், பினாங்கு கிறிஸ்துவ மையம் ஆகியவற்றுக்கு அந்த தொகை வழங்கப்பட்டதாக ஜக்ஜிட் சிங் தெரிரிவித்தார். ஒவ்வொரு அமைப்பிற்கும் 50,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!