Latestவிளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் லிவர்புல் – அர்செனல் வெற்றி

லண்டன், செப் 13 – காற்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் லிவர்புல் 4-3 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் கிளப்பை வென்றது. இந்த ஆட்டத்தில் லிவர்புல் குழுவுக்கான 3 கோல்களை அதன் நட்சத்திர ஆட்டக்காரரான முகமட் சாலா அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் 3-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் குழுவை வீழ்த்தியது.
30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பருவத்தில் முதல் முறையாக லீக் பட்டத்தை வென்ற லிவர்புல் குழுவின் மின்னல் வேக ஆட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் லீட்ஸ் குழுவினரின் அதிரடி ஆட்டம் அமைந்தது. இந்த ஆட்டத்தில் மூன்று முறை கோல் அடித்து லிவர்புல் குழுவினர் முன்னணியில் இருந்தபோதிலும் அடுத்தடுத்து கோல்களை அடித்து லீட்ஸ் குழுவினர் நிலைமையை சமப்படுத்தினர். ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் லிவர்புல் குழுவுக்கு பெனால்டியின் மூலம் முதல் கோலை அடித்த முகமட் சாலா இந்த ஆட்டம் 3-3 என்ற நிலையில் முடிந்துவிடும் என்ற நிலையில் இருந்தபோது 88 ஆவது நிமிடத்தில் நான்காவது கோலை அடித்து லிவர்புல் குழுவுக்கு வெற்றியை தேடித்தந்தார். .
மற்றொரு ஆட்டத்தில் எப். ஏ கிண்ண வெற்றியாளரான அர்செனல் எதிர்பார்க்கப்பட்டதைவிட எளிதாக 3-0 என்ற கோல்கணக்கில் புல்ஹாம் குழுவை வீழ்த்தியது

இங்கிலாந்து பிரிமியர் லீக்
இதர ஆட்டங்களின் முடிவுகள்

கிறிஸ்டல் பேலஸ் 1 x சௌத்ஹம்டன் 0
வேஸ்ட்ஹாம் 0 x நியுகஸ்டல் 2
லிவர்புல் 4 x லீட்ஸ் யுனைடெட் 3
அர்செனல் 3 x புல்ஹாம் 0

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!