Latestமலேசியா

DAPயின் சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜோன் பெர்னாண்டஸ் காலமானர்

கோலாலம்பூர், டிச 26 – DAPயின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரும் சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஜோன் பெர்னாண்டஸ் காலமானார். வயது மூப்பின் காரணமாக 82 வயதுடைய ஜோன் பெர்னாண்டஸ் இறந்தார் என அவரது மகன் ஐவன் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

DAP-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், காலஞ்சென்ற தேவன் நாயர் மற்றும் மேலும் சிலருடன் சேர்ந்து 1966ஆம் ஆண்டில் DAP யை பெர்னாண்டஸ் அமைத்தார். அவர் 1974ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டுவரை ராசா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 1980ஆம் ஆண்டு அவர் DAPயிலிருந்து விலகினார். எனினும், 2,000ஆம் ஆண்டில் அவர் மீண்டும் DAPயில் இணைந்ததோடு 2008ஆம் ஆண்டு முதல் ஒரு தவணைக் காலம் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

2013ஆம் ஆண்டு மீண்டும் கட்சியிலிருந்து விலகிய ஒரு வழக்கறிஞரான பெர்னாண்டஸ் சிரம்பான் நாடாளுமன்ற தொகுதியை தற்காத்துக் கொள்வதற்காக அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இந்தியர்களை DAP ஒதுக்குவதே இரண்டாவது முறையாக தாம் DAPயிலிருந்து விலகுவதற்கு காரணம் அவர் கூறியிருந்தார். எனினும், 2013ஆம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டபோது அவர் 221 வாக்குகளை மட்டுமே பெற்று DAPயின் நடப்பு செயலாளர் அந்தோனி லோக்கிடம் தோல்வி கண்டார். அவருக்கு ரோஸ் எங் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!