Latestமலேசியா

இணைய நேர்காணல் : 5000-கும் அதிகமான வேலை வாய்ப்புகள் !

கோலாலம்பூர், நவ 22 இளைஞர்களுக்கான  Penjana வேலை வாய்ப்பு கண்காட்சி இணையம் வாயிலாக நடத்தப்படவிருக்கிறது.

இம்மாதம் நவம்பர்  24 –ஆம் தேதி பல்வேறு தொழில்துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் , இணையத்தில், வேலை வாய்ப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வார்கள் .

மறுநாள் 25, 26 ஆம் தேதிகளில் இரு நாட்களுக்கு  , 26 முதலாளிமார்கள் பங்குபெறும் வேலை வாய்ப்பு கண்காட்சி இணையம் வாயிலாக நடத்தப்படும்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலைகளுக்கான நேர்முகத் தேர்வில் , இளைஞர்கள் பங்கேற்கலாம். அதற்கு முன்பாக,  ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக https://careerfair.perkeso.gov.my  எனும் இந்த அகப்பக்கத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.

நவம்பர் 24 ஆம் தேதி மதியம் மணி 12-க்குள்  அந்த இலவச பதிவுக்கு பதிந்து கொள்ள வேண்டும்

EIS PERKESO எனும் அதிகாரப்பூர்வ சமூக அகப்பக்கத்தின் மூலமாக மேல் விபரங்களைப் பெறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!