Latestஉலகம்

தைவானில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் ஒகினாவாவை சுனாமி தாக்கியது

ஒகினாவா, ஏப்ரல் 3 – தைவானுக்கு அருகே, 7.5 மாக்னிடியூட்டாக (magnitude) பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, ஜப்பான், ஒகினாவா பகுதியை சுனாமி தாக்கியது.

சுனாமி ஏற்பட்டவுடன், ஒகினாவா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு நேரப்படி இன்று காலை மணி 9.18 வாக்கில், 30 சென்டிமீட்டர் உயரமுள்ள சுனாமி பேரலை, யோனகுனி தீவை தாக்கியது.

அச்சம்பவத்தை தொடர்ந்து, ஜப்பானின் தென்கிழக்கு கரையோரப் பகுதியையும், மூன்று மீட்டர் உயரத்திற்கு சுனாமி பேரலை தாக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தைவானை உலுக்கிய நிலநடுக்க அதிர்வுகள், தலைநகர் தைபேயிலும் உணரப்பட்டது.

அதனால், ஹுவாலியான் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

ஹுவாலியான் நகரில், கட்ட இடிபாடுகளில் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவிலும், அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்ட வேளை ; ஜப்பானை அடுத்து பிலிப்பீன்ஸ்சிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!