Latestமலேசியா

இந்தியர்களின் மேம்பாட்டிற்காக மித்ராவின் திட்டங்களை அரசாங்கம் தொடர வேண்டும் – வேதமூர்த்தி வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 15- நாட்டின் மக்கள் தொகையில் 7 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நாட்டிலுள்ள இதர மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். நாட்டின் மேம்பாட்டிற்காக ஆங்கிலேயர்களால் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கு ஆங்கிலேயேர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என மேலவையில் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தோட்டங்களை திறப்பதற்கும் அந்த தோட்டங்களில் வேலை செய்வதற்கும் மற்றும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கு நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த இந்திய சமுகம் சுதந்திரத்துற்குப் பின் தோட்ட துண்டாட்டதினால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மேம்பாட்டிற்காக தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களை விற்பனை செய்ய தொடங்கியதால் தோட்ட தொழிலாளர் சமூகம் வேலை இழந்து, வீடு இழந்து நகர்புரம் ஒட்டிய பகுதிகளில் குடிசை வாசிகளாக வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழல் உள்ளானது என வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தினாலும் இந்திய சமூகம் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கிய சூழநிலையிலே இருந்து வந்தது. இது வேலை இல்லாத இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்தன.
ஒட்டு மொத்த மலேசியர்களும் இந்தியர்களின் பிரச்சனையை புரிந்துக் கொண்டால் அவர்கள் தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுபட முடியும்.
அந்த அடிப்படையில்தான் கடந்த அரசாங்கம் தமது தலைமையிலான மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றுத் திட்டத்தின் மூலம் இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக இந்திய இளைஞர்களுக்கு பல்வேரு பயிற்சிகள் வழங்கப்பட்டன. வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழில் கல்வியை பெருவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன். தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் சிறுதொழிலில் ஆர்வமுள்ள இந்தியர்களுக்கு பயிற்சிகளும் உதவிகளும் மித்ராவின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த கால அரசாங்கம் இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக அமல்படுத்திய மற்றும் அதற்காக பரிந்துரை செய்த ஆலோசனைகளையும் திட்டங்களையும் இப்போதைய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்
இதன் வழி, மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வை களைந்து நாட்டின் சுபீட்சத்தில் அனைவரும் பங்கேற்று ஒருமைபாடுமிக்க மலேசியர்களை உருவாக்க முடியும் என தமது மேலவை உரையில் ஹிண்ராவ் இயக்கத்தின் தலைவருமான வேதமூர்த்தி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!