
புதுடில்லி,பிப் 16- நான்கு மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய அஸ்திரா (ASTRA) ஏவுகனையை எதிர்வரும் ஜூன் மாதம் இந்தியா பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. விமானத்தில் இருந்து ஏவப்படும் இந்த நவீன மயமான ஏவுகனை 100 கிலோமீட்டரில் இருந்து 160 கிலோமீட்டராக அத்திகரிக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுற்ற பின்னர் அடுத்த ஆண்டு அஸ்திரா ஏவுகனை ராணுவத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருக்கும் போர் விமானங்களை விட அதிக நவீனத்துவம் மற்றும் இரவிலும் பகலிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஆற்றல் அஸ்திரா ஏவுகனைக்கு இருப்பதாக இந்திய தற்காப்புத்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார். இந்திய விமானப்படை மற்றும் கடற்படை இந்த ஏவுகனையை பயன்படுத்தும்.