Latestஇந்தியா

இந்தியாவின் இரு கோவிட்-19 தடுப்பூசிகள் அவசர அனுமதியைப் பெற்றன

புதுடில்லி , ஜன 3 –இந்தியாவில் கோவிட்–19 வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின் அவசர பயன்பாட்டுக்காக, அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு , ஆக்ஸ்ஃபார்ட் அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) நிறுவனத்தின் ‘ கோவிஷீல்ட்’  (Covishield ) தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின்  ‘கோவக்சின்’ (Covaxin)  தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் சீரம் (Serum )கழகமும்,  பாரத் பயோடேக் நிறுவனமும் தயாரித்திருக்கும் கோவிஷீல்ட், கோவக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளும், அவசரத் தேவைக்காக பயன்படுத்தப்படுமென  அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்திருக்கிறது.

அவ்விரு தடுப்பு மருந்துகள் 110 விழுக்காடு பாதுகாப்பானவை.  மிதமான காய்ச்சல்,  உடல் வலி,  ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள்  தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் வழக்கமான பாதிப்புகளே என அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வேளையில் , இந்தியாவில் பேரளவில் கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பாக, அந்நாட்டின்  தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில்,  தடுப்பூசிக்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பூசி இயக்கத்தில் காணப்படும் பலவீனங்களை முன்கூட்டியே கண்டறிய அந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!