Latestஇந்தியா

இந்தியாவில் கோரத் தாண்டவமாடும் கோவிட்-19 பெருந்தொற்று, 50 லட்சம் பேர் பாதிப்பு!

புதுடெல்லி, செப் 16 – இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. அதி வேகமாகப் பரவி வரும் இந்த கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா திணறிக் கொண்டு வருவது, இதன் மூலம் நன்கு புலப்படுகிறது.

கடந்த 11 நாட்களில் மட்டும் இந்தியா, 10 லட்சம் நோய்த் தொற்று சம்பவங்களைப் பதிவுச் செய்துள்ளது. நிலைமை இப்படியே போனால், உலகில் மிக அதிகமான கோவிட்-19 நோய்ப் பரவல் சம்பவங்களைப் பதிவு செய்துள்ள நாடாக இருக்கும் அமெரிக்காவைக் கூட, இந்தியா மிஞ்சி விடும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் பேருக்குக் குறைவானவர்களே இந்நோய்க்கிருமிக்கு ஆளாகின்றனர். ஆனால் இந்தியாவிலோ ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 90 ஆயிரம் பேருக்கு மேல் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப் படுகின்றனர்.

அமெரிக்காவில் இந்நோய்க்கிருமிக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை, தற்போதைக்கு 67 லட்சமாக உள்ளது. அனைத்து உலக நாடுகளையும் மிஞ்சுமளவுக்கு இந்தியாவில் அண்மைய காலமாக மிக அதிகமானோர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இப்பெருந்தொற்று காரணமாக இன்று மட்டும் அந்நாட்டில் 1,290 பேர் மரணமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு மொத்த மரண எண்ணிக்கை 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் எல்லாம், இந்தியா, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரசிலைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!