Latestஇந்தியா

இந்தியாவில் கோவிட் தொற்று தொடர்ந்து மோசமடைகிறது; 70 லட்சத்தைக் கடந்தது

புதுடில்லி, அக் 11- இந்தியாவில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை மிஞ்சிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகில் வேகமாக கோவிட் தொற்று பரவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது திகழ்கிறது. அந்நாட்டில் இதுவரை 70 லடசத்து 53,807 பேர் இந்த தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 108, 334பேர் இந்தியாவில் கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 75,000 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் அதிகமானோர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவில் புதுடில், மும்பாய் உட்பட பல முக்கிய நகர்களில் மக்கள் தொகை அதிகமாகவும் மற்றும் மிகவும் நெரிச்சலான இடங்களில் மக்கள் குடியிருந்து வருவதால் அங்கு கோவிட் தொற்றைத் தடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் சூழ்நிலை உள்ளாகியுள்ளது. இதனால் உண்மையில் அங்கு அதிகமானோர் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 8,67,496பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 60 லட்சத்து 77,977பேர் குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 214,000 பேர் மரணம் அடைந்துள்ள வேளையில் பிரேசிலில் குறைந்தது 150,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!