
மாலே, பிப் 22 – இந்தியா மற்றும் மாலத்தீவுக்கிடையிலான பாதுகாப்பு உடன்பாடு இணக்கம் காணபட்டது. மாலத்தீவுக்கு 375 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான உடன்பாட்டிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவுக்கான இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
அதற்கு முன்னதாக மாலத்தீவு ராணுவ அமைச்சர் Maria Thithi யுடன் (மரியா திதி) ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார். மாலத்தீவின் கடலோர காவல்படை திறனை வலுப்படுத்துவதற்காக இந்த கடன்தொகையை இந்தியா வழங்க முன்வந்துள்ளது. அதோடு மாலத்தீவின் நம்பிக்கையான நட்பு நாடாகவும் இந்தியா விளங்கிவரும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.