Latestமலேசியா

இந்திரா காந்தியின் கணவரை ஏன் கைது செய்யமுடியவில்லை – நஸ்ரி கேள்வி

கோலாலம்பூர், செப் 16 – பல கொடுரமான குற்றவாளிகளை எல்லாம் கைது செய்துள்ள போலீசாரால் இந்திரா காந்தியின் பிள்ளையை தூக்கிச் சென்ற அவரது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை ஏன் கைது செய்ய முடியவில்லை என சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் வினவினார்.

இந்திரா காந்தியை தமது இளைய மகள் பிரசன்னா டிக்சாவுடன் ஒன்று சேர்ப்பது மற்றும் தாயிடமிருந்து பிள்ளைகளை அபகரித்து கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணில் காட்டாமல் இருக்கும் முகமட் ரிடுவான் அப்துல்லாவை சட்டத்தின் முன் நிறுத்தும் விவகாரத்தில் போலீசார் இன்னமும் தீர்வு காண முடியாமல் இருப்பது குறித்து நஸ்ரி தமது ஏமாற்றத்தை தெரிவித்தார்.

முகமட் ரிடுவான் அப்துல்லாவை கண்டுபிடிப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மோசமான குற்றவாளிகள் கூட எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. கைது செய்ய முடியவில்லை என்று கூறுவது மாயமாகவும் அல்லது விசித்திரமாகவும் இருப்பதாக நஸ்ரி தெரிவித்தார்.

இந்திரா காந்தி விவகாரத்தில் அரசாங்கம் செயல்பட முடியால் இருப்பது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் ஆர்வமாக இல்லையென்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். இந்திரா காந்தி விவகாரத்திற்கு தீர்வு காணப்படாதவரை தங்களை அரசாங்கம் பாதுகாக்கவில்லை என்ற சிந்தனைதான் சிறுபான்மை மக்களுக்கு இருக்கும். எனவே இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும்ட என நஸ்ரி கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!