Latestவாழ்க்கை

இன்றைய நாட்டு நடப்புகளை நமது பெண்கள் கவனிக்கிறார்களா – பானு ஸ்ரீ

ஒரு நாட்டின் ஆண்களும் பெண்களும் முழு ஆற்றலுடனும் திறனுடனும் வாய்ப்புகளுடனும் முழுமையான வாழ்க்கை வாழ்வதைத்தான் பெண்களின் முன்னேற்றம் என கூறலாம்.அப்படி இருந்தாலும் ஆண்களுக்கு இணையான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

இன்றைக்கு மகளிர் தினம்.முன்பு அனைத்துலக மகளிர் தினம் என அழைக்கப்பட்டது.தற்போது அதை மகளிர் தினம் என்று மட்டுமே குறிக்கிறார்கள். ஒரு வேளை அனைத்து மகளிரும் ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ வேலை பார்ப்பவராக இருப்பதால் இப்படி மாறி இருக்கலாம்.நகர்ப்புறங்களில் படித்த ,அலுவலகங்களில் ஆணுக்குச் சமமாக வேலை பார்க்கும் பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு,முன்பை விட பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.

பொருளீட்டாத பெண்ணை “வீட்டில் சும்மா இருக்கிறாள்”எனும் சமூக நிலைதான் இன்றும் தொடர்கிறது.பெண்கள் உலகின் வேலைப்பழுவில் இரண்டில் ஒரு பங்கை செய்கிறார்கள்.

குடும்பம் தொடங்கி நாட்டின் ஆட்சி அமைப்பு வரை பெண்களைச் சிந்திக்கத் தெரிந்தவர்களாக அங்கீகரிப்பது மிக அரிதாகவே திகழ்கிறது. “உனக்கு ஒன்றும் தெரியாது “என வீடுகளில் ஒலிக்க ஆறம்பிக்கும் குரல் பெண் மீதான மிகப் பெரிய புறக்கணிப்பாகும்.அதனால் ஆணுக்குச் சமமான அறிவுத்திறன் இருந்தாலும்,பெண்களுக்கு உயர்மட்டங்களில் சம அளவில் பிரதினிதித்துவம் அளிக்கப்படுவதில்லை.

பெண்கள் எந்தச் சூழலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், வலிமையும் பெற்றுவிட்டார்கள். தன் பண்பாட்டை காத்து தன்நிலை மாறாமல் வாழ்ந்திட பெண்ணுக்கு சமுதாயத்தின் பாதுகாப்பும், ஒத்துழைப்பும் தேவை.

பெண்களால் வீடும், சமூகமும், நாடும், உலகும் முன்னேறுவது இன்றைய நிலை. இப்படி தன்னையும், உறவையும், ஊரையும் முன்னேற்ற பெண்கள் இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளவும் வெற்றிபெறவும் வல்லமை பெற்றவள் பெண்.

இவ்வாறான பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கும் பெண்கள் தற்போதைய நாட்டு நடப்பை கூர்ந்து கவனிக்கிறார்களா என்றால் நிச்சயமாக அனேகப் பெண்களின் பதில் இல்லை என்பதுதான்.படித்தப் பெண்களும் கூட நாட்டு நடப்பைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே கூற வேண்டும்.கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஆனால் எல்லா நாடுகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

தொலைக்காட்சியில் முக்கிய செய்திகள் ஒ ளிபரப்பாகும் நேரத்தில் நம் பெண்கள் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி நாட்டில் என்னதான் நடக்கிறதென்று தெரியும்.அல்லது கைதொலைபேசியில் அரட்டை அடிப்பார்கள்.நாட்டில் எது நடந்தாலும் எனக்கென்ன வந்தது என இருப்போரும் உண்டு.
ஒரு சில நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்திருப்பதால் பெண்களாலும் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை நிச்சயம் வழங்க முடியும்.

உண்மையான மாற்றம்
நிச்சயம் வரும்.

– பானு ஸ்ரீ (புக்கிட் மெர்த்தாஜம், பினாங்கு)

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!