Latestமலேசியா

இபிஎப் முதலாம் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் சலுகை மேலும் விரிவுப்படுத்தப்படும் :  நிதியமைச்சர்

கோலாலம்பூர்,  நவ 15- ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர், இ.பி.எப் முதலாம் கணக்கிலிருந்து பணம்  எடுப்பதற்கு ஏதுவாக , அந்த சலுகை விரிவுப்படுத்தப்படுமென  நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ  சப்ரூல் தெங்கு அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

அந்த சலுகையில் மேலும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்காக,  இபிஎப் ஊழியர் சேம நிதி வாரியத்துடன் கலந்து பேசப்பட்டு வருவதாக  அமைச்சர் குறிப்பிட்டார்.இன்னும் சில தினங்களில் அது குறித்து அறிவிப்பு செய்யப்படுமென்றாரவர்.

2021 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது, கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தரப்பினர், இபிஎப் முதலாம் கணக்கிலிருந்து, 12 மாதங்கள் வரையில்  மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட்  வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுமென
அறிவிக்கப்பட்டது.

அந்த சலுகையின் கீழ், முதலாம் கணக்கிலிருந்து மொத்தம்  ஆறாயிரம் ரிங்கிட் வரையில்  தொகையை எடுக்கலாம். ஏற்கனவே அமலில் இருக்கும்  ஐ–லெஸ்தாரி ( i-Lestari ) திட்டத்துடன் இணைந்து, தகுதியுடைய ஒருவர் 12,000 ரிங்கிட் வரையில் தங்களது சேம நிதியை எடுக்கலாம்.

ஐ லெஸ்தாரி திட்டத்தின் கீழ் இபிஎப்–பின் இரண்டாவது கணக்கிலிருந்து மாதத்துக்கு 500 ரிங்கிட் வரையில் பணம் எடுக்கலாம். அடுத்தாண்டு ஏப்ரல் வரையில்  அந்த சலுகையைப் பெற முடியும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!