
சென்னை, பிப் 15 – தமிழ்நாடு தஞ்சாவூரில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரட்டை குழந்தைகளைத் தூக்கிச் சென்ற குரங்கு ஒன்று, அக்குழந்தைகளில் ஒன்றை உயரே வீசி கொன்றது.
பிறந்து எட்டே நாட்களான தனது குழந்தைகளின் அழுகுரல் கேட்ட தாய் புவனேஸ்வரி, படுக்கையறையிலிருந்து குழந்தைகளை குரங்கொன்று தூக்கிச் செல்வதைக் கண்டு பதற்றமடைந்தார்.
குழந்தைகளை தூக்கிக் கொண்டு அந்த குரங்கு வீட்டின் கூரை மீது ஏறிக் கொண்டது.
புவனேஸ்வரியில் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அண்டை அயாலார் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அந்த குரங்கு ஒரு குழந்தையை கூரையிலேயே விட்டுச் சென்றதோடு, மற்றொரு குழந்தையை உயரே வீசியது.
அந்த குழந்தை கால்வாயில் விழுந்து இறந்தது.
கூரையில் விடப்பட்ட குழந்தை ஆபத்தான நிலையைத் தாண்டியிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரங்குகள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குவதோடு உணவுகளைத் திருடிச் செல்லும். ஆனால் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகும்.