Latestமலேசியா

இரயில் நிலையத்தில் மாணவி மானபங்கம்; உதவி போலீஸ் கைது

பெட்டாலிங் ஜெயா, ஆக 5 – எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் பெண் மாணவி ஒருவரை மானபங்கம் செய்தது தொடர்பில் போலீஸ் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அந்த 36 வயதுடைய ஆடவரை கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி முகமட் பைசல் தெரிவித்தார்.
மேலும், அந்த உதவி போலீஸ் அதிகாரி 19 வயது மாணவியை பார்ததாகவும், ஆனால் மானபங்கம் புரிய வில்லை என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் மேல் விசாரணையை மேற்கொள்ள தடுப்புக் காவலில் வைக்கும்படி மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக பிரசரணா மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்விசாரணையை நடத்தி, தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் போலீசில் சமர்ப்பிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியது. மேலும், இந்த விவகாரத்தை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், குற்றம் அல்லது சட்டதை மீறும் எந்தவொரு நபருக்கும் இணக்கம் காட்டப்படாது என்பதையும் பிரசரனா மலேசியா பெர்ஹாட் சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!