
கோலாலம்பூர், ஜன 14- கெப்போங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 43 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்பில் மூன்று சந்தேகப் பேர்வழிகள் கைது செய்ப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ சைபுல் அஸ்லி கமருடின் (Saiful Azly Kamaruddin) தெரிவித்தார். அதோடு 106,166 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.