Latestஉலகம்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் 15 பெண்களுக்கு தொடர்பு – விசாரணையில் அம்பலம்

கொழும்பு, பிப் 22- இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று மேறகொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு 15 பெண்கள் தயாராகியதாகவும் அவர்களில் ஐந்து பெண்கள் அந்த தாகுதலில் மாண்டதாக இலங்கை போலீஸ் ஊடகப் பேச்சாளர் D.I.G Ajit Rohanna (அஜித் ரோஹனா தெரிவித்தார். அந்த தற்தொலை தாக்குதலில் 277 பேர் மாண்டனர். இவர்களில் எண்மர் தற்கொலை போராளிகள் என கூறப்பட்டது.

ஈஸ்டர் தின தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட 24 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடந்த வாரம் இலங்கை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட Zahran Hashim ( சஹரான் ஹாஷிம் ) 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய வகுப்பில் சம்பந்தப்பட்ட அந்த 15 பெண்களும் கலந்துகொண்டனர். முழுக்க முழுக்க இனவாத கருத்துக்களை பரப்பும் வகையில் அந்த வப்புக்கள் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவந்துள்ளது. தாம் உட்பட 14 பெண்கள் அந்த வகுப்புக்களில் கலந்துகொண்டதாகவும் இறுதிநாள் வகுப்பின்போது தற்கொலை தாக்குதலில் பங்கேற்பதற்கு Zahran Hashimமிடம் அவர்கள் வாக்குறுதி அளித்ததையும் அந்த பெண் கூறியுள்ளார்.

அந்த 15 பெண்களில் ஐவர் (Sainthamaruthu) சாய்ந்தமருது பகுதியில் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டனர் என Ajit Rohanna தெரிவித்தார். எஞ்சிய 10 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எழுவர் பயங்கரவாத தடுப்பி பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!