Latestஇந்தியாசினிமா

இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? – முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் 800 எனும் திரைப்படத்திற்கு அரசியல் ரீதியாக பல தரப்புகளிடமிருந்து ஏராளமான எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தன்னைத் தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையை அளிக்கின்றது என்று முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்துள்ள நிலையில் அதற்கான விளக்கங்களை ஓர் அறிக்கை மூலம் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் அரசியலாக்கப்பட்டதற்குக் காரணம் தான் பேசிய சில கருத்துக்கள் தவறாக திரித்து சொல்லப்பட்டதன் விளைவுதான் என்று கூறிய முத்தையா தான் ஒரு போதும் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் எனும் கருத்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மலையக தமிழர்கள் வம்சாவழியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் சிறு வயது முதலே கடுமையான இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். ஏழு வயதில் தனது தந்தை வெட்டப்பட்டு, சொந்தங்களில் பலர் பலியாகி, பல முறை நடுத்தெருவில் நிற்கும் நிலைமை இவருக்கு வந்துள்ளது.

இவ்வறிக்கையின் வாயிலாக தான் ஒரு மலையக தமிழனாக இருப்பினும் தன் மலையக மக்களுக்கு செய்த உதவிகளைக் காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம் என்றும் தன்னைப் பொருத்தமட்டில் சிங்களவர்களாக இருந்தாலும், மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் தாம் சமமாகவே பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இப்படம் குறித்த சர்ச்சைகள் வலுத்து வரும் வேளை, தொடர்ந்து இப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக் கொள்வாரா எனும் சந்தேகம் எழுந்த்துள்ள நிலையில், அவர் தரப்பிலிருந்து இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!