Latestமலேசியா

இளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை

கம்பார், 6 – கம்பாரில் 3 மாடி கடை வீட்டின் முதல் மாடியில் தங்கயிருந்த தாதியான 35 வயதுடைய கார்த்திகா ரவீந்திரன் அவரது 12 வயது மகன் சர்வேஸ் மற்றும் 6 வயது மகள் ஹர்சிகா ஆகியோரின் மரணம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மூவரும் தாமான் கம்பார் புத்ராவில் தாங்கள் தங்கியிருந்த அறையின் சுவரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்ட் ஹஸ்ரோன் நஸ்ரி கூறினார்.

கணவரிடமிருந்து பிரிந்து தமது பிள்ளைகளுடன் கடந்த ஆறு ஆண்டு காலமாக அறை ஒன்றில் தங்கியிருந்த கார்த்திகா கம்பார் மருத்துவமனையில் தாதியாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலால் காத்திகா பாதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலும் எவரிடமும் பேசாமல் மௌனமாக இருந்த வந்துள்ளார் என்றும் ஹஸ்ரோன் நஸ்ரி தெரிவித்துள்ளார்.

அந்த அறையில் கடுமையான புகை வெளியேறியதை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் உள்ளே பூட்டப்பட்டிருந்த அந்த அறைக்கதவை உடைத்து தீயை அணைத்தனர். தீக்காயங்களுடன் அங்கிருந்த கட்டிலில் இறந்து கிடந்த கார்த்திகா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அவர்கள் வாடைகைக்கு தங்கியிருந்த அறையின் கதவை உடைத்தபோது அங்குள்ள கட்டிலில் தீக்காயங்களுட்ன் அவர்கள் இறந்து கிடந்தனர். கடுமையாக தீப்புகையினால் சுவாசிக்க முடியாமல் அவர்கள் மாண்டதாக கூறப்பட்டது.

கம்பார் மருத்துவமனையில் தாதியாக வேலை செய்துவந்த கார்த்திகா தமது கணவரிடமிருந்து பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் கம்பார் பண்டார் பாருவிலுள்ள மூன்று மாடி கொண்ட கடை வீட்டில் முதல் மாடியிலுள்ள ஒரு அறையில் வாடகைக்கு தங்கியிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இன்று காலை மணி 10.13 அளவில் திடீரென அந்த அறையில் கடுமையான தீப்புகை வெளிவருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த கடை வீட்டிற்கு வந்த தீயணைப்பு படையினர் அந்த அறையின் உட்புறக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதனை உடைத்து உள்ளே புகுந்து அந்த அறையின் நடுப்பகுதியில் தீ பரவிக்கொண்டிருந்த நிலையில் அதனை அனைத்தனர்.
அப்போது அங்கிருந்த கட்டிலில் கார்த்திகாவும் அவரது பிள்ளைகள் ஹர்த்திகா மற்றும் சர்வேஸ் கட்டிலில் இறந்த கிடந்துள்ளனர். அந்த அறைக்குள் இருந்த அலமாரியின் பின்னால் பெட்ரோல் டின் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த அறையின் சுவரில் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்ததற்கான அடையாளமும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கம்பார் போலீஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிடெண்டன் ஹஸ்ரோன் நஸ்ரி தெரிவித்தார். அவ்வீட்டிலிருந்த பணப் பையில் அடையாளக் கார்டு, மை கிட்ஸ் கார்டு மற்றும் சாரணர் கார்டும் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கார்த்திகா தமது இரு பிள்ளைகைளுடன் அந்த அறையில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் 2 வாரங்களாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தாகவும் விசாரணையில் தெரியவந்ததாக ஹஸ்ரோன் நஸ்ரி தெரிவித்தார். அந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!