Latestமலேசியா

இ.பி.எப் முதலாம் கணக்கிலிருந்து  பத்தாயிரம் ரிங்கிட் வரையில் பணத்தை மீட்கலாம்; பாதிக்கப்பட்ட சந்தாதாரர்கள் அனைவரும் தகுதி பெறுகின்றனர்

கோலாலம்பூர், நவ 26 – வேலையிழந்த  அல்லது வருமானம் குறைக்கப்பட்ட  இ.பி.எப் சந்தாதாரர்கள் ,  தங்களது முதல் கணக்கில் இருந்து 10,000 ரிங்கிட் வரை  பணத்தை மீட்கலாம்.

சந்தாதாரர்கள் , இணையம் அல்லது  இபிஎப் அலுவலகத்திற்கு  நேரடியாகச் சென்று  தொகையை மீட்க விண்ணப்பிக்கலாமென , நிதியமைச்சர் தெங்கு சப்ரூல் அசிஸ் தெரிவித்தார்.

மக்களவையில் நிதியமைச்சரின்  அந்த அறிவிப்பை  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கைதட்டி வரவேற்றனர். முதலாம் கணக்கிலிருந்து பணத்தை மீட்க வகை செய்யும் ஐ – சினார் ( i –sinar ) திட்டம் , பாதிக்கப்பட்ட  அனைத்து இபிஎப்  சந்தாதாரர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.

அதன் வழி  80 லட்சம் சந்தாதாரர்கள்  அந்த சலுகைக்கு தகுதி  பெறுகின்றனர்.பணத்தை மீட்க விரும்புபவர்கள் , தங்களது வருமானம் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காண்பித்தால் மட்டுமே போதுமானதாகுமென நிதியமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!