Latestமலேசியா

இ.பி.எப் லாப ஈவு சந்தாதாரர்களுக்கு மனநிறைவை தரக்கூடும்

கோலாலம்பூர், ஜன 14 – இ.பி.எப்பின் கடந்த ஆண்டுக்கான லாப ஈவு சந்தாதாரர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்காவிட்டாலும் நிச்சயம் ஏமாற்றத்தை தந்துவிடாது என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான லாபா ஈவுக்கு நிகராக அல்லது அதற்கும் சற்று குறைவாக கடந்த ஆண்டு சந்தா தொகைக்கு லாப ஈவு வழங்குவது குறித்து இ.பி.எப் வாரியம் அண்மையில் விவாதித்ததாக அந்த நிறுவனத்திற்கு அணுக்கமான தகவல்கள் கூறின.

கடந்த ஆண்டு கோவிட் தொற்று பரவியதன் காரணமாக இ.பி,எப் வழங்கவிருக்கும் லாப ஈவு சந்தாதாரர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் லாப ஈவு இன்னும் இறுதி வடிவம் காணப்படவில்லை. ஐ-லெஸ்தாரி மற்றும் ஐ -சினார் திட்டத்தின் கீழ் சிறப்பு பண மீட்பு நடவடிக்கைகளையும் இ.பி.எப் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இ.பி.எப் லாப ஈவு குறித்து சற்று தாமதமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இ.பி.எப் தனது சந்தாதாரர்களுக்கு லாப ஈவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்துள்ளது. தற்போது இ.பி.எப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பேர் சந்தாதாரர்களாக இருந்தாலும் சுமார் 70 லட்சம் பேரின் கணக்குகள் மட்டுமே சுறுசுறுப்பான சந்தா தொகை வரவு இருப்பதாக கூறப்படுகிறது.
2008ஆம்ஆண்டு இ.பி.எப் மிகவும் குறைந்த அளவில் அதாவது 4. 5 விழுக்காடு லாப ஈவை வழங்கியது. 2019 ஆம் ஆண்டு இ.பி.எப் 5.45 விழுக்காடு லாப ஈவு வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!