Latestமலேசியா

உச்சத்தில் கோவிட் தொற்று – இன்று மேலும் 629 பேர் பாதிப்பு; அறுவர் மரணம்

கோலாலம்பூர், அக் 16 – நாட்டில் கோவிட் தொற்றின் உச்சம் இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் இந்த உயிர்க்கொல்லிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 629ஆக உயர்ந்து இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 18,758 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று அறுவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்த உயரிழப்புக்களால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளது.
இந்த தொற்றின் மூன்றாவது அலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வந்தபோதிலும் கோவிட் தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருகிறது என்பதற்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான சான்றாகும்.

சபாவில் மட்டும் 489 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகினர். சிலாங்கூரில் 50 பேரும் பினாங்கில் 33 பேரும் லபுவானில் 19 பேரும் கோலாலம்பூரில் 10 பேரும் பேராவில் 9 பேரும் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். பேராவில் லெக்கீர், (Lekir) கெடாவில் புந்தார் (Buntar) சிலாங்கூரில் மேர்போக் ( Merbok) ஆகிய மூன்று புதிய தொற்று மையங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நோயிலிருந்து 245 பேர் குணமடைந்துள்ளனர். இதன்வழி இதுவரை முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,259 ஆகும். மருத்துவமனைகளில் இன்னமும் 6,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!