
கோலாலம்பூர், ஜன 14- பெட்டாலிங் ஜெயா டிரொபிகான அவெனியூ-வில் (Tropicana Avenue) உள்ள ஓர் உணவகத்தில், வாடிக்கையாளரை தாக்கியதாக நம்பப்படும் டத்தோ பட்டத்தைக் கொண்ட ஆடவர் ஒருவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில், வாடிக்கையாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட டத்தோவை சத்தம் போட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அந்த டத்தோ அந்த வாடிக்கையாளரை திரும்ப அடித்துள்ளார். அத்துடன் பெண் ஒருவரையும் அறைந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி முகமட் பைஃசால் (Nik Ezanee Mohd Faisal) தெரிவித்தார்.
தாக்கப்பட்ட அந்த நபர் அந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்திருந்தார்.
முன்னதாக, இன்று சமூக ஊடகங்களில் ஆடவர் ஒருவரை, மற்றவர்கள் சேர்ந்து சமாதானப்படுத்தும் காணொளி வைரலாகியிருந்தது.