
புதுடில்லி, பிப் 15- இந்தியா, உத்தரகாண்ட்-டில் பனிப்பாறை இடிந்து உருகியதைத் தொடர்ந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் காணாமல் போனவர்களில் இதுவரை 53 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் பலரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். வெள்ளத்தின்போது தபோவன் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட பல தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.