Latestமலேசியா

உலக இளம் கண்டுப்பிடிப்பாளர் கண்காட்சி ஷா அலாம் ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ,3 தங்கம் பதக்கம் வென்றனர்

ஷா அலாம், நவ 26 – இந்தோனேசியாவில் இணையம் வாயிலாக அனைத்துலக ரீதியில் நடைபெற்ற இன்வென்டர்ஸ்டே எனப்படும் உலக இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்காட்சியில் மலேசியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஷா அலாம் ஈபோர் தமிழ்ப்பள்ளியின் சார்பில் நான்கு அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் மூன்று அணிகள் தங்கப் பதக்கத்தையும் மற்றொரு அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அதோடு இப்போட்டியில் கலந்துகொண்ட 500 குழுக்களில் சிறந்த குழுவுக்கான தங்கப் பதக்கத்தையும் ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.

கணேசா பன்னீர் செல்வம், தீபாஷினி சிவகுமார், கீர்த்தி முரளிதரன், எர்விண்டர் பூபாலன், சாதனா மணிமாறன், மார்த்தினி மணிமாறன், காளிஸ்வரி தேவி வடிவேலன், அனுஷா முத்தையன் , தர்மேஷ் மோகன், மதன் விக்ரம் ஜெயகணேஷ், கீர்த்திகா ஜெயஜீவன், ஜன்னி விக்னேஸ்வரன், பிரிதிஷ் செல்வம், கௌதம் ரெட்டி சந்திரன், ஜீவனா ரமேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

மேலும் வக்ஷனா செல்வம், ஷர்வின் கார்த்திகேசன், புகழ் லோகநாதன், யுவராஜ் தனபால் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

மூலிகை நீர் வடிகால், சிறப்பு முக கவசம், வேப்பிலை முகக்கவசம், டால்ஸி ஸ்டார் எனப்படும் மூலிகை இனிப்பு ஆகிய படைப்புக்களை இம்மாணவர்கள் படைத்து நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!