Latestமலேசியா

உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க, கவர்ச்சிகர விடுமுறை கால திட்டங்கள்!

பெட்டாலிங் ஜெயா, செப் 22 – உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்க, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் Tourism Malaysia நிறுவனம், தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
கவர்ச்சிகரமான பல்வேறு விடுமுறை கால திட்டங்களை வழங்குவதும் அதில் அடங்கும் என சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி (Datuk Seri Nancy Shukri) தெரிவித்தார்.
உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை விளம்பரப் படுத்த அமைச்சு இவ்வாண்டு ஜூன் மாதம் www.malaysia.travel எனும் அகப்பக்கத்தைத் தொடக்கியது. நாட்டிலுள்ள சுற்றுலா நிறுவனங்கள், தங்களின் சுற்றுலா திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த, இந்த அகப்பக்கத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 பெருந்தொற்றால் தொய்வடைந்திருக்கும் உள்நாட்டு சுற்றுலாத் துறையை மீண்டும் எழுச்சி பெறச் செய்ய, தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தாங்கள் தொடர்ந்து எடுத்து வருவதாகவும் டத்தோஸ்ரீ நான்சி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!