Latestமலேசியா

எனது மகனின் உடல் முதலையின் வாயில் இருந்ததைப் பார்த்தேன் – கண்ணீர் மல்க தந்தை

கோத்தா கினபாலு, ஆக 13 – சுங்கை கினபாத்தாங்கான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது 8 வயது மகனை முதலை இழுத்துச் சென்றதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த்தாக ஆடவர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தமது மகன் அஸ்மின் அப்துல்லாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதால் அவனை காப்பாற்ற முடியாமல் போனதாக அந்த ஆடவர் கூறினார். மேலும், முதலையின் வாயில் தனது மகனின் உடல் இருந்ததை தான் பார்த்ததாகவும், காப்பாற்றுவதற்குள் முதலை தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து விட்டதாகவும் அந்த தந்தை தெரிவித்தார்.

நேற்று காலை மணி 10.00 அளவில் ஆற்றோரத்தில் படகை நிறுத்திக்கொண்டிருந்தபோது தமக்கு பின்னால் நின்றுகொண்டு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் அஸ்மின் அப்துல்லாவை திடீரென முதலை இழுத்துச்சென்ற தகவல் அவனது தந்தையின் மூலம் தங்களுக்கு கிடைத்த்தாக மலேசிய பொது தற்காப்பு படையின் அதிகாரி கேப்டன் அகமட் தெரிவித்தார்.
தேடும் மற்றும் மீட்பு குழுவினர் நேற்று மாலை மணி 5,30 வரை அந்த சிறுவனின் உடலை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். மாலையில் இருள் சூழ்ந்ததைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேடும் நடவடிக்கை இன்று காலையில் மீண்டும் தொடங்கியதாக கேப்டன் அகமட் தெரிவித்தார்.

மலேசியாவிலேயே சபா மற்றும் சரவா மாநிலங்களில் உள்ள ஆறுகளில்தான் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது தினசரி வாழக்கையில் ஆறுகளை அதிகமாக பயன்படுத்துவதால் அவர்கள் முதலைக்கு எளிதில் இரையாகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!