Latestமலேசியா

என்னைப்போல் ஒருவன் – மஸ்டா 6 ரக ககாருக்கு வந்த சோதனை

காஜாங், செப் 16 – தான் செய்யாத பல்வேறு சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக தனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மஸ்டா 6 ரக காருக்கு அடிக்கடி அதிகமான சம்மன்கள் வருவதை இதற்கு மேலும் பொருத்து கொள்ள முடியாத ஆடவர் ஒருவர் ஆராய்ந்து பார்த்ததில் இறுதியாக தனது கார் போலவே அதே வர்ணம், அதே ரகம், அதே எண் பட்டை கொண்ட காரை அடையாளம் கண்டுள்ளார்.
அந்த இரு கார்களும் அருகருகே நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆன அதே சமயத்தில் போலிஸ் நிலையத்திற்கும் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் அது திருடப்பட்ட கார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த திருடப்பட்ட சிவப்பு நிற மஸ்டா கார் செக்ஸன் 1, பண்டார் பாரு பாங்கியில் கார் நிறுத்துமிட பகுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காஜாங் OCPD Asst Comm Mohd Zaid Hassan தெரிவித்தார்.

மேல்விசாரணையில், அந்த கார் பகாங், குவாந்தான் பெசேரா எனும் இடத்திலிருந்து காணாமல் போன கார் என்றும், அதை இங்கு பயன்படுத்தி வந்துள்ளவர் போலியான கார் எண் பட்டையை பயன்படுத்தி வந்துள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது.

தான் செல்லாத இடங்களிலிருந்து, அங்கு இழைக்கப்பட்ட சாலை போக்குவரத்து குற்றங்களுக்காக சில காலமாகவே அந்த கார் எண் பட்டையைக் கொண்ட ஜோகூரில் வசிக்கும் உண்மையான மஸ்டா உரிமையாளருக்கு அடிக்கடி சம்மன்கள் கிடைத்து வந்துள்ளன.

அந்த திருடப்பட்ட காரை பயன்படுத்தி வந்தவர் யார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!