Latestமலேசியா

என்ன ஆனாலும் சரவாக் மாநில தேர்தலை நடத்தியே தீருவோம்; மாநில முதலமைச்சர் சூளுரை!

கூச்சிங், அக் 18 – நாடு தற்போது கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்கொண்டு வருகின்ற போதிலும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவதில் சரவாக் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக மாநில முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி ஆபாங் ஜோஹாரி துன் ஒப்பேங் (Datuk Patinggi Abang Johari Tun Openg) கூறியிருக்கின்றார்.

கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்கொள்ளும் ஆற்றல் தங்களுக்கு இருப்பதால், மாநிலத்தின் 12ஆவது சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என GPS எனும் சரவாக் கட்சிகளின் கூட்டணித் தலைவருமான டத்தோ பாத்திங்கி ஆபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

நாடு கடினமான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கி வரும் இச்சமயத்தில் சரவாக் மாநில தேர்தல் நடத்தப்படக் கூடாது என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

ஆனால் தேர்தலை நடத்துவது எங்கள் மாநில விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிடக் கூடாது என டத்தோ பாத்திங்கி ஆபாங் ஜோஹாரி விவரித்தார்.

அடுத்தாண்டு ஜூன் மாதத்தோடு, சரவாக் மாநிலத்தில் GPS கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதற்குள் தேர்தலை நடத்தவில்லை என்றால், சரவாக் மாநில சட்டமன்றம் தாமாகவே கலைந்து விடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே தேர்தலை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என டத்தோ பாத்திங்கி ஆபாங் ஜோஹாரி கூறினார். எனினும் சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அவர் தெரிவிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!